Mouna Ragam 2 Today Episode | 14.02.2022 | Vijaytv
Mouna Ragam 2.14.02.2022
மௌன ராகம் தொடரில் இன்று, தருண் மற்றும் ஸ்ருதி இருவரும் கார்த்திக் வீட்டில் விருந்துக்கு வந்து இருந்தார்கள். அப்போது தருண் கார்த்திக் இடம் தனக்கு இருக்கும் குழப்பங்களை கூறினார். தனக்கு இந்த கல்யாணம் நடந்ததே குழப்பம் தான் என்று கூறினார். ஆனால் கார்த்திக் அவருக்கு ஆறுதல் சொல்லி, தன் மகள் அவரை இவளோ விரும்பினார் என்பதை எடுத்து கூறினார். ஸ்ருதி அந்த வீட்டில் சத்யாவுக்கு மரியாதை கிடைப்பது, தருண் தன்னை பிடிக்கவில்லை என்று கூறியது என்று அனைத்தையும் தன் அம்மா மற்றும் பாட்டியிடம் கூறினார். விருந்துக்கு கூட தருண் சத்யா சொல்லி தான் வந்தார் என்று கூறினார். அந்த வீட்டில் சத்யா தன்னை அதிகாரம் செய்வதாக கூறினார். இதை கேட்ட காதம்பரி rukmani இருவரும் கோபம் கொண்டார்கள்.பின் கொஞ்ச நாளிலே அவளை அந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடலாம் என்று கூறினர். வருண் சத்யாவுக்கு தனியாக பாட்டு சொல்லி கொடுக்க ஒரு பள்ளி திறக்கலாம் என்று முடிவு செய்தார். அதை அவரது அப்பாவிடம் பகிர்ந்துகொண்டார். அவரும் அதற்கு ஒத்துகொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…