Mouna Ragam 2 Today Episode | 14.11.2022 | Vijaytv
மெளன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா வருவதை பார்த்த காதம்பரி, விஸ்வநாதன், ருக்மணி மற்றும் ஸ்ருதி அதிர்ச்சியில் நின்றார்கள். மல்லிகா எப்படி வெளியே வர முடியும் என்று குழம்பினார்கள். பின் சக்தி தன் அப்பா பிறந்தநாளுக்கு தான் ஏற்பாடு செய்தது போல் கச்சேரியும் நடக்க போகிறது என்று சந்தோசமாக பேசினார். பின் கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் சேர்த்தே கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டு கொண்டாடினார்கள். இதை பார்த்த காதம்பரி கொந்தளித்ததார். இன்னும் கொஞ்ச நேரம் இதை பார்த்தால் அந்த மல்லிகாவை நானே கொன்று விடுவேன் என்று கூறி கிளம்பினார். பின் விஸ்வநாதனை பார்த்து தான் மல்லிகாவோடு சேர்ந்து வாழ்வது உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் நாங்கள் வாழ்வோம் என்று கூறினார். இனியும் எங்கள் வாழ்க்கையில் குறுக்கே வர வேண்டாம் என்று எச்சரித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….