Mouna Ragam 2 Today Episode | 15.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 15.06.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் வேலைகளை முடித்து திரும்பியதும் சரியான சாப்படும் இல்லாமல் தூக்கம் வராமல் தவித்தார். அதை கவனித்த சத்யா உடனே அவருக்கு சாப்பாடு கொடுக்கலாம் என்று நினைத்தார். வீட்டில் யாருக்கும் தெரியாமல் வருணுக்கு சாப்பாடு எடுத்து சென்றார். ஆனால் அதை பழனி பார்த்து நிறுத்திவிட்டார். மேலும் இது போல் கண்டிக்க வேண்டாம் என்றால் தான் குற்றாளத்துக்கே செல்வகாத கூறினார். இதற்கு பயந்து போய் சத்யாவும் சாப்பாடை கொடுக்காமல் விட்டார். ஆனாலும் மனம் வருணை சுற்றியே வந்தது சத்யாவுக்கு. அவர் சரியாக சாப்பிடாமல் மாத்திரை போடாமல் எப்படி தூங்குவார் என்று பதறினார். இதனால் மல்லிகவை தூங்க வைக்க பாட்டு பாடுவது போல் பாடி வருணையும் தூங்க வைத்தார். மேலும் அடுத்த நாள் வருண் வேலைக்கு வந்தார். வந்தவர் மூட்டை தூக்குவது பளு தூக்கும் வேலையாக செய்தார். அவரால் செய்ய முடியவில்லை என்றாலும் சத்யாவுடன் இருக்க வேண்டும் என்று அதையும் செய்தார். பின் அந்த வாரம் வேலை செய்ததற்கு சம்பளமாக 2000 ரூபாயும் வாங்கினார். இதை பார்த்த சத்யாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…