Mouna Ragam 2 Today Episode | 15.07.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தருண் இடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்து அவரிடம் நடிக்க ஆரம்பித்தார். தன் அப்பாவை இப்படி பார்க்க முடியவில்லை, அப்பாவுக்கு எதுவும் நடந்தது விட கூடாது என்று புலம்பினார். மேலும் இந்த சக்தி எங்கள் வாழ்க்கையில் வந்தாலே இப்படி தான் எங்கள் குடும்பம் சிதைந்து விடும் என்று கூறினார். இந்த நிலையிலும் சக்தி மற்றும் அவரது குடும்பத்தை பழி சொல்லி தருண் மனதில் இடம் பிடிக்க நினைத்தார். அதையும் தருண் நம்பி ஸ்ருதிக்கு ஆறுதல் சொல்லி சாப்பாடு ஊட்டிவிட்டார். அடுத்த நாள் காலையில் இங்கு இருந்து கார்த்திக்கை சென்னைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்தார். இங்கு சரியான வசதி எதுவும் இல்லை. மேலும் மல்லிகா மற்றும் குடும்பம் கார்த்திக் அருகில் இருப்பதை விரும்பாமல் இத முடிவை எடுத்தார். உடனே டாக்டரை பார்க்க சென்றார். ஆனால் சக்தி அவரை மரித்தார். என்ன விஷயம் என்று கேட்டார். அதற்கு ஸ்ருதி முதலில் உனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கூறினார். ஆனால் சக்தி அவரை தனியாக டாக்டரை பார்க்க அனுமதிக்க முடியாது தானும் வருவேன் என்று கூறினார். கோவத்தில் கொந்தளித்தது ஸ்ருதி. மேலும் தன் அப்பாவை உடனே சென்னைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கூறினார். இதை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்த நிலையில் அவரை வெளியே கொண்டு செல்வது நல்லது இல்லை என்றார்கள். ஆனால் ஸ்ருதி அதை கேட்காமல் கத்தினார். தான் சொன்னது தான் நடக்கும் என்றார். ஆனால் சக்தி அவரை எதிர்த்து பேசி, தான் இது அனுமதிக்க மாட்டேன் என்று உறுதியாக கூறினார். மேலும் டாக்டர் சொல்லாமல் அப்பாவை இங்கேயும் போக போறது இல்லை என்றார். இதனால் அசிங்க போட்ட ஸ்ருதி வேகமாக கிளம்பினார். தருண் இடம் ஒப்பாரி வைத்து அழுதார். அவரும் இவருக்கு ஆறுதல் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…