Mouna Ragam 2 Today Episode | 15.10.2021 | Vijaytv
Mounaragam2.15.10.2021
மௌன ராகம் தொடரில் இன்று, மல்லிகா வீட்டிலேயே தங்கிவிட்ட கார்த்திக் அவர் சமைத்த சாப்பாடையும் சாப்பிட்டார். அவருக்கு அது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. பின் மல்லிகாவிற்கு மருந்து எடுத்து கொடுத்து சாப்பிட வைத்து தூங்கவும் வைத்தார். பின் சத்யாவிற்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பினார். தான் மால்லிகாவிடம் தான் உள்ளதாகவும் அவருடன் சேர்ந்து சாப்பிட்டு ஒரே வீட்டில் இருக்கிறோம். அவளின் கையால் சாப்பாடு சாப்பிட்டது அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். இதை கேட்ட சத்யா துள்ளி குதித்து கொண்டாட வேண்டும் போல் இருந்தது. ஷீலா ருக்மணி மற்றும் காதம்பரி மூவரும் இணைந்து சத்யாவை எப்படி வீட்டை விட்டு வெளியே அனுப்புவது என்று திட்டம் போட்டனர். இதற்கு சுருதியை தருணிற்கு திருமணம் முடித்தால் அந்த வேலையை சுருதியே செய்து முடிப்பார் என கூறி தனக்கு சாதகமாக பேசி முடிவு எடுத்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….