Mouna Ragam 2 Today Episode | 16.02.2023 | Vijaytv

Mouna Ragam 2. 16.02.2023
மெளன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா கோவிலில் நடந்ததை சொர்ணத்திடம் சொல்லி வருத்தப்பட்டார். மேலும் இந்த விரதத்தை எப்படி முடித்து யார் எடுத்து இருப்பார்கள் என்று புரியாமல் குழம்பினார்கள். அப்போது வேண்டும் என்றே காதம்பரி மற்றும் ருக்மணி இருவரும் சக்தி தான் அந்த நகையை திருடி விட்டாள், அதற்கு மல்லிகா உதவி செய்து இருப்பாள் என்று கூறினார்கள். அதை கேட்டதும் பொறுமையை இழந்து மல்லிகா கத்தினார். என் மகளை நான் அப்படி வளர்க்கவில்லை. அடுத்தவர் பணம், நகை, இதற்கு ஆசை படும் ஆள் இல்லை என் சக்தி. அவள் கண்டிப்பாக இந்த விரதத்தை முடித்துக் கோவிலில் பூஜை செய்வாள் என்று சாவாலாக கூறினார் மல்லிகா. சக்தி நகையை காணவில்லை என்று அழுது புலம்பினார். வருண் அவரை சமாதானம் செய்தார். கண்டிப்பாக கண்டு பிடித்து விடலாம், அதை என் பொறுப்பில் விடு என்று கூறினார் வருண். ஷாலினி போற போக்கில் தருண் வேலை செய்வதை பார்த்து அவரிடம் எதார்த்தமாக பேசினார். அதை பார்த்த ஸ்ருதி மீண்டும் ஷாலினியை திட்டினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….