Mouna Ragam 2 Today Episode | 17.03.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் வீட்டில் அனைவரும் குடும்பமாக அமர்ந்து சாப்பிடும் போது ஸ்ருதி தானே எல்லாருக்கும் பரிமாறினார். சத்யாவை உக்கார வைத்து அவருக்கும் பரிமாறினார். வீட்டில் அனைவரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். பின் ஸ்ருதி தனக்கு இந்த மஞ்சள் கயரை போடுவது பிடிக்கவில்லை என்றார். அதை செயினாக மாற்றலாமா என்று கேட்டார். ஷீலா அதற்கு, ஆமாம் தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு செய்ய வேண்டும் என்றார். மனோகர் அதற்காக ஏற்பாடுகளை செய்யுமாறு ஷீலாவிடம் கூறினார். அவரும் நல்ல நாள் எல்லாம் ஜோசியரை அழைத்து பேசி முடிவு செய்தார். ஸ்ருதி இந்த நேரத்தில் சத்யா அம்மாவை வர வைக்க வேண்டும் என்று கூறினார். ஷீலா அதெல்லாம் வேண்டாம் என்றார். இல்லை சத்யா அம்மா கண்டிப்பாக வர வேண்டும் என்றார். ஷீலாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் ஒத்துக்கொண்டார். பின் வீட்டில் அனைவரும் சத்யா அம்மாவை அழைப்பதை பற்றி பேசினார்கள். இதனால் சத்யாவுக்கு பதட்டம் ஆனது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…