Mouna Ragam 2 Today Episode | 18.08.2022 | Vijaytv
Mouna Ragam 2. 18.08.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, ருக்மணி மற்றும் காதம்பரி இருவரும் ஜெயிலில் இருந்தார்கள். ருக்மணி இந்த நிலைக்கு வந்து விட்டோமே என்று புலம்பினார். ஆனால் தான் செய்த தவறை இன்னமும் உணரவில்லை. காதன்பரி தன்னை கைது செய்யும்போது கார்த்திக் பேசாமல் இருந்ததை நினைத்து கோவத்தில் கொந்தளித்தார். மேலும் rukmani தன்னையும் காதம்பரியயும் பார்க்க கார்த்திக் மற்றும் ஸ்ருதி இருவரும் வரவில்லை என்று கோவத்தில் இருந்தார். அடுத்து நாள் ஸ்ருதி அவர்களை பார்க்க வந்தார். ஆனால் காத்ம்பரி அவரிடம் பேசவே இல்லை. ருக்மணி அவரை திட்டி திரும்ப அனுப்பிவிட்டார். அதே நேரம் மனோகர் கார்த்திக்கை பார்த்து அவருக்கு ஆறுதல் கூறினார். இத்தனை வருடம் கூடவே இருந்தும் கார்த்திக் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகம் இருப்பது தெரியாமல் போனதை நினைத்து வருந்தினார். பின் மல்லிகா மற்றும் பழனி இருவரும் கார்த்திக் வீட்டுக்கு வந்தார்கள். மல்லிகா வீட்டுக்குள் வர தயங்கினார். ஆனால் அவரை அனைவருமே அழைத்து பேசினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…