Mouna Ragam 2 Today Episode | 18.10.2021 | Vijaytv
மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் இரவு தூங்கி எழுந்து பேசிக்கொண்டிருந்தனர். மழை விடாமல் பெய்வதாக பேசிக்கொண்டனர். பின் தான் கிளம்புவதாக கூறினார் கார்த்திக். சற்று நேரத்தில் வண்டியில் புறப்படும்போது சுகுமார் அங்கு வந்தார். சாலை இன்னும் சரி செய்யவில்லை எனவும், வண்டிகள் எதுவும் போக முடியாது எனவும் கூறினார். இதை கேட்டதும் கார்த்திக் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இன்னொரு நாள் மல்லிகாவுடன் இருக்கப்போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் மல்லிகவுக்கு என்ன சொல்வதென புரியாமல் நின்றாள். சற்று நேரத்தில் காதம்பரிக்கு கார்த்திக் அழைத்து தான் ஹைதராபாத்தில் இருப்பதாகவும் வேலை முடிந்ததும் தானே வீட்டிற்க்கு வருவதாகவும் கூறி வைத்தார். இதை கேட்டுக்கொண்டிருந்தார் மல்லிகா. தருணை பார்பதற்கு ஸ்ருதி மனோகர் வீட்டிற்க்கு வந்தார். வந்து சத்யாவிடம் தருணை தனக்கு திருமணம் முடிக்க முயற்சி செய்து தரவேண்டும் என்று கூறினார். அதற்கு சத்யா என்ன கூறினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…