மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சக்தி இருவரும் தேனிலவு செல்ல கிளம்பினார்கள். அப்போது தருண் அவரை கேலி கிண்டல் செய்வதற்கு தானும் மனோகரும் அவர்கள் கூடவே வருவதாக கூறினார். இதனால் வருண் மேலும் பதறினார். ஆனால் தருண் கொஞ்ச நேரத்தில் அவர் விளையாட்டுக்கு தான் அப்படி பேசினோம் என்று கூறினார். பின் வருண் சக்தி இருவரும் தேனிலவுக்கு கிளம்பினார்கள். ஸ்ருதி இதையெல்லாம் பார்த்து எரிச்சல் அடைந்தார். பின் தருண் இடம் மீண்டும் நல்லவர் போல் பேச ஆரம்பித்தார். ஆனால் தருண் இனியும் உன்னிடம் நான் ஏமாற விரும்பவில்லை என்று கூறினார். இந்த நிலையில் கோவத்தில் உடனே அவர் தாத்தா வீட்டுக்கு கிளம்பினார். அங்கே சென்று அவர் கோவத்தில் கத்தினார். தனக்கு முன் அந்த சக்தி தேனிலவு சென்று சந்தோசமாக இருப்பதை பார்க்கவே முடியவில்லை என்றார். அவரை அனைவரும் சமாதானம் செய்தார்கள். பின் விஸ்வநாதன் அதற்கு ஒரு திட்டம் போட்டார். அவர்கள் சந்தோசமாக இருக்க கூடாது என்று நினைத்தார். உடனே ஒரு ரவுடியை அனுப்பி அவர்களை கண்காணிக்க வைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…