Mouna Ragam 2 Today Episode | 19.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 19.07.2022

Mouna Ragam 2. 19.07.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி மற்றும் ருக்மணி இருவரும் வந்ததில் இருந்து மல்லிகாவிடம் சண்டை போட ஆரம்பித்தார்கள். கார்த்திக்கை அடைவதற்கு நீ செய்த சதி வேலை தான் இது என்றார் காதம்பரி. மேலும் சக்தி தான் இந்த ஆள் வைத்து கொலை செய்ய முயற்சி செய்து இருப்பார் என்று கூறினார். இதை கேட்ட பழனி மற்றும் சொர்ணம் அவர்களுக்கு தக்க முறையில் பதில் அளித்தார்கள். ஆனால் வாக்குவாதம் பெரிதானது. இதனால் பொறுக்க முடியாமல் மல்லிகா அந்த சண்டையை நிறுத்தினார். மேலும் காதம்பரியை வாயே thirakka முடியாத அளவு பேசினார். அவரிடம் எனக்கு தான் முழு உரிமை உள்ளது. எனக்கு மட்டும் தான் இருக்கிறது. இதில் நான் அவரை அடைய நினைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும். உங்கள் வாழ்க்கைக்காக தான் நானும் சக்தியும் ஒதுங்கி இருந்தோம். கார்த்திக் நிம்மதியாக இருக்கவே ஒதுங்கி இருந்தோம். ஆனால் இத்தனை வருடம் ஆகியும் அவர் நிம்மதியாக இல்லை. அதற்கு காரணம் நீங்கள் தான் என்று தைரியமாக பேசினார். இதை கேட்டு. வாயடைத்து போனார்கள் காதம்பரி, ருக்மணி மற்றும் ஸ்ருதி மூவரும். பின் மல்லிகா அவர் குணம் ஆக வேண்டும் யாரிடமும் சண்டை போட விருப்பம் இல்லை எனவும் கூறினார். ருக்மணிக்கு மல்லிகா எப்படி இவளோ தைரியமாக பேசினார் என்று அதிர்ச்சி. சற்று நேரத்தில் கார்த்திக் கண் முழித்தார். அப்போது காதம்பரி கூடவே இருந்து அழுது புலம்பினார். ஆனால் கார்த்திக் இதுவும் நல்லதுக்கு தான், இல்லை என்றால் சக்தியை கொலை செய்து இருப்பார்கள் என்று கூறினார். இந்த நிலையிலும் சக்தி பற்றி மட்டுமே நினைக்கிறார் என்று கோவம் கொண்டார் காதம்பரி. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author