Mouna Ragam 2 Today Episode | 20.02.2023 | Vijaytv
மெளன ராகம் 2 தொடரில் இன்று, தருண் மற்றும் ஷாலினி இருவரும் வேலை முடிந்து வீட்டுக்கு ஒன்றாக திரும்பினார்கள். அப்போது தனக்கு வேலை கிடைப்பது என்பது ரொம்ப முக்கியாமன விஷயம் என்று கூறினார் ஷாலினி. பின் அவரது குடும்ப நிலவரம், அவரது வீட்டில் இது வரை என்ன நடந்தது, குடும்ப சூழ்நிலை என்று அனைத்தையும் தருண் இடம் கூறினார். இதனால் ஷாலினி மேல் மேலும் பாசம் அதிகரித்தது தருணுக்கு. பின் வீட்டுக்கு திரும்பியதும் இவர்கள் பேசி சிரித்து கொண்டே வருவதை பார்த்து ஸ்ருதி எரிச்சல் அடைந்தார். உடனே ஷாலினியை திட்ட ஆரம்பித்தார். எத்தனை முறை உன்னை தருண் இடம் பேச வேண்டாம் என்று கூறினாலும், மீண்டும் மீண்டும் அவருடன் உனக்கு என்ன பேச்சு என்று ஷாலினியை அடிக்க கை ஓங்கினர். ஆனால் அதை தருண் தடுத்து நிறுத்தினார். மேலும் எல்லாரையும் சந்தேகத்தோடு பார்க்கும் உனக்கு என்ன சொன்னாலும் புரியாது என்றும் கத்தினார். அதே நேரம் வருண் நகு வந்து என்ன பிரச்சனை என்று தெரிந்ததும், உனக்கு தருண் மீது கூட நம்பிக்கை இல்லையா? என்று கேட்டார். ஆனால் அதற்கும் ஸ்ருதி, தருண் தன் சொந்த அண்ணியயே காதலித்தவர். அதனால் அவரை என்னால் நம்பவே முடியாது என்று கூறினார். அதை கேட்டு வருண் சக்தியிடமும் தருண்யிடமும் சண்டை போடுவார் என்று எதிர் பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை. தனக்கு தருண் மீதும், சக்தி மீதும் நம்பிக்கை உள்ளது என்று கூறினார். அதே நேரம் காதம்பரி தன்னை யாருமே இந்த வீட்டில் மதிக்கவில்லை. முக்கியமாக கார்த்திக் தன்னை அசிங்க படுத்தி பேசுகிறார் என்று நினைத்தார். அதற்காக அடுத்த வாரமே ஒரு இசை கச்சேரி நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….