Mouna Ragam 2 Today Episode | 20.06.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா அவரது மாமனார் பேசியதை நினைத்து பார்த்தார். தனக்காக எதற்கு வருண் இவளோ நாள் எந்த வசதியும் இல்லாத இந்த இடத்தில் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணினார். மல்லிகாவும் என்ன யோசனை என்று பள் தடவை கேட்டும் அதற்கு பதில் சொல்லவில்லை. மேலும் தன்னால் வருனுக்கும் காதம்பரி, ருக்மணி மற்றும் ஸ்ருதியால் பிரச்சனை வரும் என்று நினைத்தார். அதற்காக நாம் ஒதுங்கி இருந்தால் மட்டுமே வருண் வாழ்க்கை நல்லதாக அமையும் என்று யோசித்தார். மனோகர் பேசியதில் மனம் மாறி வீட்டுக்கு எதும் வந்து விடுவாளோ என்று பயந்து ஷீலா மற்றும் ஸ்ருதி இருவரும் மல்லிகா வீட்டு வாசலில் நின்று மீண்டும் சண்டை போட்டார்கள். அவர்களுக்கு பதிலுக்கு பதில் பழனியும் பேசினார். வருணுக்கு கொடி கணக்கில் பணம் இருந்தும் இங்கு வந்து கஷ்ட படுகிறான் என்று கத்தினார்கள். உன்னிடம் என்ன உள்ளது என்று ஏளனம் செய்தார்கள். உன் பாட்டை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினார். மேலும் வருணுக்கு நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைப்பேன் என்றார். அதை கேட்ட சத்யா என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…