Mouna Ragam 2 Today Episode | 20.09.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் வீட்டு வாசலில் நின்று உள்ளே என்ன நடக்கிறது என்று எட்டி பார்த்தார் காதம்பரி. அப்போது மல்லிகா மற்றும் கார்த்திக் இருவரும் பேசி சந்தோசமாக இருப்பதை பார்த்து எரிச்சல் அடைந்தார். மேலும் கார்த்திக் வெளியே சென்றதும் உள்ளே செல்ல பார்த்தார். ஆனால் அதற்குள் சொர்ணம் அவரை பார்த்து எந்த பொருள் வேண்டும் என்றாலும் அவர்களே அனுப்பி வைப்பதாக கூறினார். அதே நேரம் மனோகர் வீட்டில் அனைவரையும் வே வைத்து முக்கியமான ஒரு முடிவு எடுத்து இருப்பதாக கூறினார். இனி இந்த வீட்டில் எந்த முடிவு எடுப்பது என்றாலும் அது சக்தி தான் எடுக்க வேண்டும். இந்த வீட்டின் முழு பொறுப்பும் சக்திக்கு ஒப்படைக்க போகிறேன் என்றார். இதை கேட்டதும் சக்தி தனக்கு இதெல்லாம் தேவை இல்லை என்றார். ஆனால் மனோகர், என் மனைவிக்கு அடுத்து உன்னால் மட்டும் தான் இந்த குடும்பத்தை நிர்வாகம் செய்ய முடியும் என்று கூறினார். இந்த முடிவை கேட்டு வருண் தருண் இருவருமே சந்தோசம் கொண்டார்கள். ஆனால் ஸ்ருதி தன்னை பற்றி யாருமே நினைக்கவில்லையே என்று கொந்தளித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…