Mouna Ragam 2 Today Episode | 21.09.2022 | Vijaytv
Mouna Ragam 2. 21.09.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி தான் இனி இந்த குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மனோகர் சொன்னதில் இருந்து ஸ்ருதி கொந்தளித்து போய் இருந்தார். மேலும் அதை அவரது பாட்டிக்கு அழைத்து கூறினார். இந்த வீட்டு பொறுப்பு அவளுக்கே கொடுத்து தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் என்று கத்தினார். ஆனால் வேறு வழி இல்லாமல் இருப்பதாக கூறினார். அடுத்து தருண் இடம் தன்னை யாருமே புகழ்வது இல்லை என்று கதறினார். சக்தி செய்த சாப்பாட்டை மட்டும் எல்லாரும் பாராட்டுகிறார்கள் என்று கோவம் கொண்டார். ஆனால் தருண் அதற்கு நீயும் நல்லதாக சமைத்து போட வேண்டும் என்று கூறினார். இதனால் அடுத்த நாள் காலையில் தானே சமைப்பதாக சமையல் அறைக்கு வந்தார். சக்தி மற்றும் வேலை பார்ப்பவரை வெளியே அனுப்பி விட்டு அவரே சமைக்க ஆரம்பித்தார். தோசை மாவு எடுத்து தோசை ஊற்றினார். ஆனால் அது கருகிவிட்டது. மேலும் சட்னி அறைக்க மிக்சியை எப்படி போடுவது என்று கூட தெரியாமல் நின்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….
About Author
Auto Amazon Links: No products found.