Mouna Ragam 2 Today Episode | 22.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 22.06.2022

Mouna Ragam 2. 22.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் பழனி வீட்டை விட்டு வெளியே போவதை பார்த்ததும் சத்யாவை பார்த்து பேச வந்து இருந்தார். அப்போது சத்யா சின்ன குழந்தைகளுக்கு பாட்டு சொல்லி கொடுத்துக்கொண்டு இருந்தார். அதை பார்த்து அந்த பாட்டை ரசித்தபடியே அமர்ந்தார் வருண். ஆனால் போன பழனி மீண்டும் வருண் இருப்பதை பார்த்து திரும்பி வந்தார். வந்ததும் வருண் தலையில் ஒரு கொட்டு வித்து இங்கு என்ன செய்கிறாய் என்று அதட்டினார். வருண் நீங்கள் வீட்டில் இல்லை என்று தான் சக்தியை பார்க்க வந்தேன். பின்னாடியே வந்து விட்டீர்கள் என்று கேட்டார். உடனே இந்த இடத்தை விட்டு கிளம்பி செல் என்றார் பழனி. ஆனால் வருண் மீண்டும் பேச ஆரம்பித்தார். தான் என்ன செய்தால் சத்யாவை என்னுடன் அனுப்புவீர்கள் என்று கேட்டார். ஆனால் பழனி இந்த நாடகத்தை வேறு எங்காவது போடும்படி கூறினார். ஆனால் வருண் விடாமல் எந்த வேலையாக இருந்தாலும் செய்கிறேன் என்று உறுதியாக கூறினார். உடனே பழனி, எந்த பாட்டை உங்கள் வீட்டில் கேலி செய்தார்களோ, எந்த பாட்டை கேவலமாக பேசினார்களோ அதே பாட்டை சரியாக நீ பாட வேண்டும் என்று கூறினார். ஒரே ஒரு பாட்டு 5 நிமிடத்துக்கு பாட வேண்டும் என்று சவால் விட்டார். ஆனால் வருண் தன்னால் பாட முடியாது என்று நினைத்தார். வேறு எது வேணாலும் செய்வதாக கூறினார். ஆனால் பழனி பாட்டு பாடி சக்தியை அழைத்துச் செல் என்றார். வருண் அதிர்ச்சியில் உறைந்து போனார். இனி என்ன செய்ய போகிறோம் என்று பயந்து கொண்டே கிளம்பினார். உடனே தருணுக்கு அழைத்து வர சொன்னார். அவரும் ஸ்ருதியை அழைத்துக் கொண்டு வந்தார். வந்ததும், தான் ஒரு சவாலில் வெற்றி பெற்றால் மட்டுமே சக்தியை அழைத்து செல்ல முடியும் என்று கூறினார். என்ன சவால் என்று வருண் கேட்டார். அதற்கு வருண் ஒரு பாட்டு 5 நிமிடம் பாடினால் மட்டும் தான் இந்த சவாலில் வெற்றி பெற முடியும் என்றார். அதை கேட்டதும் தருண் ஸ்ருதி இருவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். உனக்கு பாட்டு வராதே என்று தருண் கூறினார். ஆனால் வருண் எப்படியாவது தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ஸ்ருதியை பார்த்து நீயே எனக்கு பாட்டு சொல்லி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதேக்கு ஸ்ருதி என்ன சொன்னார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author