Mouna Ragam 2 Today Episode | 22.08.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா இனி இங்கு இருப்பது நல்லதல்ல, அதனால் உடனே தாண்டிக்குடி செல்லலாம் என்று நினைத்தார். மேலும் வருண் சக்தி அனைவருமே கிளம்பலாம் என்றார். ஆனால் அதை கேட்டு வீட்டில் அனைவருமே மறுத்து பேசினார்கள். இது தன உன்னுடைய வீடு. இதில் நீயும் கார்த்திக்கும் தான் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறினார்கள். மேலும் சக்தி உறுதியாக இனி நீயும் அப்பாவும் இங்கு தான் இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் இது நம்முடைய உரிமை, இத்தனை நாள் ஓடி ஒளிந்தது போதும் என்றும் கூறினார். இதனால் வேறு வழி இல்லாமல் மல்லிகா சம்மதித்தார். சக்தி மற்றும் வருண் மனோகர் வீட்டுக்கு திரும்பினார்கள். அவர்களை பார்த்த ஸ்ருதி, தன் அப்பாவை எப்படி தனியாக விட்டு வரலாம் என்று கோவம் கொண்டார். ஆனால் சக்தி அப்பா தனியாக இல்லை, கூடவே மல்லிகா, பாட்டி, பழனி மற்றும் சொர்ணம் இருப்பதாக கூறினார். இதை கேட்ட ஸ்ருதி ஆத்திரம் அடைந்தார். என் அம்மா ஜெயிலில் கஷ்டப்படும்போது உங்களுக்கு குதூகலமாக இருக்கிறதோ என்று கத்தினார். ஆனால் மனோகர் நாத நேர்ம வந்ததால் அதை அப்படியே நிறுத்திவிட்டார். மேலும் மனோகர் கார்த்திக் மல்லிகாவோடு இருக்கும்போது தான் சந்தோசமாக இருப்பதாக கூறினார். இதை கேட்ட ஸ்ருதி மேலும் கொந்தலித்தார். மேலும் சக்தி இடம் இந்த சந்தோசம் உனக்கு நிலைக்காது என்று சாபம் விட்டார். ஆனால் சக்தி அதை கண்டுகொள்ளவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…