Mouna Ragam 2 Today Episode | 23.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.23.02.2022

Mouna Ragam 2.23.02.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா வீட்டில் அனைவருக்கும் புதிதாக ஒரு சமையல் செய்து கொடுத்தார். அதை சாப்பிட்ட ஸ்ருதி ரொம்ப நல்லா இருக்கே என்று பாராட்டினார். இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வங்கி சாப்பிட்டார் ஸ்ருதி. இதை பார்த்த தருண் மற்றும் ஷீலா இருவரும் ஆச்சர்யமாக பார்த்தார்கள். உடனே தனக்கும் இதே போல் சமைக்க கற்றுத்தா என்று உரிமையாக கேட்டார். இதை பார்த்த ஷீலாவுக்கு ஒன்று புரியவில்லை. உடனே சத்யாவும் கண்டிப்பாக சமைக்க கற்று தருவேன் என்று கூறினார். பின் வருண் சத்யாவின் பள்ளி திறப்பு விழாவுக்கு விளம்பரம் கொடுக்க வேண்டும் என்றும் அது ஒரு கவிதை போல அமைய வேண்டும் என்று கேட்டார். ஆனால் தருண் தனக்கு கவிதை எல்லாம் வராது என்று கூறினார். சத்யாவும் மாட்டேன் என்று கூறினார். உடனே ஸ்ருதி தான் எழுதி தருவதாக முன் வந்தார். இதையெல்லாம் பார்த்தால் தருணுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இப்படி பேசும்போது விளம்பரத்தில் போட அப்பாவின் பெயர் என்ன என்று எதார்த்தமாக கேட்டார் ஸ்ருதி. அதை கேட்டதும் சத்யா பதட்டம் அடைந்தார். இதனால் ஸ்ருதிக்கு சந்தேகம் வந்தது. ஆனால் சத்யா அப்பா பெயர் கார்த்திகேயன் என்று மத்தி கூறினார். ஆனாலும் ஸ்ருதிக்கு சந்தேகம் தீரவில்லை. அதை சமாளித்து அடுத்த வேலைக்கு சென்றார் சத்யா. இரவு நேரம் சாப்பிட வெளியே செல்ல வருண் திட்டம் இட்டார் உடனே ஸ்ருதி தருண் இருவரையும் அழைத்து செல்லலாம் என்று சத்யா கூறினார். வருணும் அதை கேட்க உடனே கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author