Mouna Ragam 2 Today Episode | 23.03.2022 | Vijaytv
Mouna Ragam 2. 23.03.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதிக்கு வெள்ளிக்கிழமையும், சத்யாவுக்கு ஞாயிற்றுகிழமையும் விசேஷத்தை வைப்பதாக கூறினார் மனோகர். ஆனால் வருண் இதை கேட்டு எதுவும் பிரச்சனையா என்று கேட்டார். ஆனால் மனோகர் தருண் தான் காரணம் என்று கூறாமல் ஸ்ருதி வீட்டில் இருந்து வருபவர்கள் சத்யா வீட்டு சொந்தங்களை மரியாதை குறைவாக நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறினார். இதனால் இப்படி நடப்பது தான் நல்லது எனவும் கூறினார். பின் ஸ்ருதி விசேஷம் முடிந்ததும் தருண் உடன் வெளியூர் செல்ல ஏற்பாடு செய்துள்ளார்கள் அதனால் அவன் இருக்க மாட்டான் எனவும் தன்மையாக பேசி புரியவைத்தார். சத்யா இப்போது மல்லிகா மற்றும் ஊரில் சொந்தங்களை வர வைக்கலாம் என்று ஆசையாக மல்லிகாவுக்கு அழைத்து பேசினார். விசேஷதில் நடந்த மாற்றத்தை கூறி மல்லிகா தாராளமாக வரலாம் எனவும் கூறினார். பின் ஷீலா மற்றும் ஸ்ருதி இருவரும் தருண் இடம் வருண் தான் இந்த விசேஷத்தை ஒன்றாக நடக்க கூடாது என்று கூறியதாக கூறினார்கள். அதை கேட்டதும் தருண் நொந்து போனார். இந்த வீட்டில் அப்பாவும் அண்ணனும் பேசுவதே இல்லை என்று புலம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…