Mouna Ragam 2 Today Episode | 23.03.2022 | Vijaytv
Mouna Ragam 2 23.03.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தாலி பெருக்கு விசேஷத்துக்கு எல்லாம் தயார் ஆனது. சத்யா கோலம் போட்டு கொண்டு இருந்தார். அப்போது ஸ்ருதி ஷீலா இருவரும் எதோ வேலைக்காரியை வேலை சொல்வது பொல் பேசினார்கள். அப்போது ஸ்ருதி வருண் இந்த விஷேசத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறினார். உடனே சத்யா எதற்கு என்று கேட்டார். பூஜையில் விளக்கு ஏற்றி பூஜை செய்து , ஆரத்தி எடுத்து செய்ய வேண்டியவை செய்ய வேண்டாமா? அதனால் வருண் வர வேண்டாம் என்று கூறினார். இதை கேட்டதும் சத்யா கோவத்தில் அவர் வர மாட்டார் என்று கூறினார். பின் அறையில் ஆர்வமாக கிளம்பிய வருனை பார்த்து வருத்தப்பட்டார். பின் வரைக்கு பொறுமையாக கூறினார். பூஜையில் விளக்கு ஏற்ற வேண்டும், அதனால் நாம் போக வேண்டாம் என்றார். உடனே சரி நீயாவது இந்த விஷேசத்தில் கலந்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் சத்யா வருண் இல்லாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை என்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..