Mouna Ragam 2 Today Episode | 24.01.2022 | Vijaytv
Mouna Ragam 2.24.01.2022
மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதி தருண் திருமணத்திற்கு போட்ட திட்டத்தின் படி வேலைகளை ஆரம்பித்தார்கள் ருக்மணி மற்றும் ஸ்ருதி. ஸ்ருதி தன் அம்மா மற்றும் பாட்டி செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார் தருணுக்கு அழைத்து. அவரும் தன் அப்பா கோபப்பட்டதை எல்லாம் கூறினார். பின் அடுத்தநாள் தன் வேலையை பார்த்தார் தருண். மதியம் ஒரு முக்கியமான வேலை இருப்பதாக கூறினார். அதற்காக தயார் ஆனார். அந்நேரம் ஸ்ருதி அழைத்து பேசினார். உடனே அவரை பார்க்க வேண்டும் என்று கூறினார். தருண் தனக்கு வேலை இருப்பதாக கூறினார். ஆனாலும் ஸ்ருதி விடாமல் அவரை வற்புறுத்தி வர வைத்தார். அவரும் ஸ்ருதி சொன்ன கோவிலுக்கு கிளம்பினார். காதம்பரிக்கு இந்த திட்டம் சரியாக வரும் என்று நம்பிக்கை இல்லை. கார்த்திக்கிற்கு தெரியாமல் இவ்வளவு பெரிய விஷயத்தை செய்ய காதம்பரி தயங்கினார். ஆனால் ருக்மணயும் ஸ்ருதியும் அவர்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள். பின் அனைவரும் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். காதம்பரியும் ருக்மணயும் ஒளிந்து கொண்டார்கள். ஸ்ருதி தன் திருமணத்தை பற்றி பேச ஆரம்பித்தார் தருண் இடம். கடைசியாக கேட்கிறேன் என்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா முடியாதா என்று மிரட்டும் தோரணையில் பேசினார். தருண் தனக்கு அதில் விருப்பம் இல்லை. எத்தனை முறை இதையே கேட்பாய்? இதற்காக என் வேலையை விட்டு வர செய்தாயா? என்று கோவம் கொண்டார் தருண். ஷீலாவும் அங்கு ருக்மணியுடன் ஒளிந்து நின்று நடப்பதை பார்த்தார். அடுத்து என்ன நடந்தது? தருண் என்ன பதில் சொன்னார்? காணொளியை பார்க்க…