Mouna Ragam 2 Today Episode | 24.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.24.02.2022

Mouna Ragam 2.24.02.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யாவை இரவு சாப்பாடு வெளியே சாப்பிடலாம் என்று கூறினார். அதை கேட்டதும் சத்யா மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். உடனே ஸ்ருதி தருண் இருவரையும் அழைத்து செல்லலாம் என்று கூறினார். வருண் உடனே தருண் இடம் பேசி கிளம்பி இருக்க வேண்டும் என்று கூறினார். தருண் இந்த விஷயத்தை ஸ்ருதி இடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் தயங்கி நின்றார். பின் ஸ்ருதியை அழைத்து இரவு வெளியே சாப்பிடலாம் என்று கூறினார். இதை கேட்டதும் ஸ்ருதிக்கு தலை கால் புரியவில்லை. தருண் என்னிடம் பேசிவிட்டார் அதுவும் வெளியே செல்ல கேட்கிறார் என்று. நம்முடன் வருண் சத்யா இருவரும் வருவதை கூறினார் தருண். உடனே ஸ்ருதிக்கு கோவம் வந்தாலும் பரவாஇல்லை நாமும் வெளியே சென்றால் போதும் என்று சந்தோசத்தில் கிளம்பினார். பின் சாப்பிட போன இடம் பிரம்மாண்டமாக இருந்தது. சத்யாவுக்கு சாப்பாடு என்ன உள்ளது என்றே தெரியவில்லை என்றார். ஸ்ருதி சத்யாவின் பார்வையிலே அவருக்கு இந்த இடம் புதிது என்று தெரிந்தது. அதனால் சத்யாவை கிண்டல் செய்தார், இந்த மாதிரி யான இடத்துக்கு இதுதான் முதல் முறை வருகிறாயா என்று. சத்யா ஆமாம் என்று கூறினார். வருண் உடனே அதனால் என்ன, இனி அடிக்கடி வரலாம் என்றார். பின் சாப்பாடு வந்ததும் சத்யாவை அக்கறையுடன் கவனித்து கொள்கிறார் வருண். அவருக்கு பரி மாறுவதும், ஊட்டிவிடுவதுமாக இருந்தார். இதை எல்லாம் பார்த்து ஸ்ருதிக்கு கோவம் அதிகரித்தது. தருண் தன்னை திரும்பி கூட பார்க்கவில்லை என்று ஆதாங்க பட்டர். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author