Mouna Ragam 2 Today Episode | 24.06.2022 | Vijaytv
Mouna Ragam 2. 24.06.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் தனக்கு குரல் வளம் வேண்டும் என்பதற்காக சுகுமார் சொன்ன திட்டப்படி கழுத்தளவு இருக்கும் தண்ணீரில் பயிற்சி செய்தார். அதை ஊரே நின்று பார்த்து. சத்யாவுக்கும் அந்த செய்தி காதுக்கு வந்தது. உடனே அவரை பார்க்க கிளம்பினார். யார் என்ன சொன்னாலும் வருண் அந்த இடத்தை விட்டு வெளியே வரவில்லை. தனக்கு பாட்டி சரியாக வரும் வரை வரவும் மாட்டேன் என்று கூறினார். பின் சுகுமார் இதெல்லாம் நடை முறையில் நடக்காது என்று புரிய வைத்து வெளியே அழைத்து வந்தார். பின் வேலைக்கு கிளம்பினார் வருண். அங்கு சத்யா யாரோ ஒரு ஆளுக்கு குரல் சரி செய்வது எப்படி என்பதை கூறுவது போல வருணுக்கு சொன்னார். இஞ்சி தட்டி டீ குடிக்கலாம், மிளகை அரைத்து சுடு தண்ணீரில் சாப்பிடலாம், மேலும் தேன் கலந்து சாப்பிடலாம், சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க வேண்டும் என்று அவருக்கு தெரிந்ததை கூறினார். அதை எல்லாம் கேட்டு வருனும் அப்படியே செய்தார். ஆனால் அப்படியும் அவருக்கு எதுவுமே சரியாகவில்லை. ஸ்ருதியை பார்த்து தனக்கு பாட்டு சொல்லி தரும்படி மீண்டும் கேட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…