மௌன ராகம் தொடரில் இன்று, வருண் செய்யும் தவறை உணர்த்த வேண்டும் என்று மனோகர் சத்யாவின் பக்கம் உள்ள ஞாயம் என்ன என்று எடுத்து உரைத்தார். வருண் அதனை கேட்டு சற்று மனம் மாறினாலும், அவரால் ஏற்றுகொள்ள முடியவில்லை. மீண்டும் பணம் வாங்கி திருமணம் செய்தது தவறுதான் என்று கூறினார். பின் தனியாக யோசிக்கும்போது சத்யா நம்மீது வைத்த பாசம், காதல் அனைத்தும் உண்மையே என்று உணர்ந்தார். சத்யாவை நினைத்து வருந்தினார். அவரிடம் பேச வேண்டும் என்று நினைத்து அவர் அருகில் சென்றார். ஆனால் அவரை பார்த்ததும் ஷீலா சொன்ன வார்த்தைகள் காதில் ஒலித்தது. அதனால் மீண்டும் கோபம்கொண்டு ஒதுங்கி சென்றார். வீட்டில் நடப்பது அனைத்தயும் பார்த்து ஷீலா மிக சந்தோசமாக இருந்தார். ருக்மணிக்கு அழைத்து நேரில் பார்க்க நினைத்தார்கள். பின் அவர்களை நேரில் பார்த்து நடந்த அனைத்தையும் கூறி மகிழ்சஹி அடைந்தார். இதை கேட்ட ருக்மணி காதம்பரி இருவரும் தங்கள் திட்டம் நிறைவேற போகிறது என்று நினைத்தார்கள்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…