மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தருண் இடம் தன் காதலை பற்றியும் அவர்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் தருண் தனக்கு ஸ்ருதி மீது காதலோ விருப்பமோ இல்லை என்று கூறினார். ஆனால் ஸ்ருதி தனக்கு என்ன குறை? எனக்கு அந்தஸ்து இல்லையா? அழகு இல்லையா? இல்லை சத்யாவை போல் என்னால் பாட முடியாதா என்று கேட்டார். தன்னிடம் வராத காதல் எப்படி சத்யாவிடம் மட்டும் வந்தது என்று கேட்டார்.தருண் இந்த விஷயத்தில் சத்யா பெயரை இழுக்க வேண்டாம், அவருக்கு வருண் உடன் திருமணம் முடித்து சந்தோசமாக இருக்கிறார்கள் என்றார். ஆனால் ஸ்ருதி தனக்கு இன்றே ஒரு முடிவு வேண்டும் என்று கூறினார்.இப்போதே என் காதலை ஏற்றுகொள்ள வேண்டும். இல்லை என்றால் சத்யாவை காதலித்த விஷயத்தை வருண் மனோகர் அனைவரிடமும் கூறுவேன் என்று மிரட்டினார்.இதை கேட்ட தருண் அதிற்சியில் உரைந்தார்.அந்த சமயம் ருக்மணி மற்றும் காதம்பரி இருவரும் அங்கு வந்தார்கள். காதம்பரி தருண் இடம் பொறுமையாக பேசிபார்த்தார். ஆனால் ருக்மணி தருணை மிரட்ட ஆரம்பித்தார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…