Mouna Ragam 2 Today Episode | 25.11.2022 | Vijaytv
Mouna Ragam 2. 25.11.2022
மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தி இருவரும் எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து வந்தான் விஸ்வநாதன் அனுப்பிய நபர். அவனையும் பிடித்து வருண் அடித்து யார் அனுப்பினார் என்று கேட்டார். ஆனால் அவன் உண்மையை சொல்லவே இல்லை. ஆனால் அவன் ஃபோனில் விஸ்வநாதன் நம்பரில் இருந்து அழிப்பு வந்ததை பார்த்துவிட்டார் வருண். பின் அறைக்கு திரும்பியதும் சக்தி இங்கு இருக்க பயமாக இருக்கிறது. உடனே வீட்டுக்கு கிளம்பலாம் என்று கூறினார். ஆனால் வருண், இப்படி ஒவ்வொரு பிரச்சனையும் பார்த்து பயந்து ஓடினாள் எதற்குமே தீர்வு கிடைக்காது என்று கூறினார். நல் சக்தி மீண்டும் மீண்டும் இங்கு நடப்பது எதுவும் சரி இல்லை என்று பயந்தார். ஆனால் வருண் அதை சரி செய்துவிடலாம், நாம் அதை பற்றி இப்போதிக்கு கவாலியா பட வேண்டாம் என்று கூறினார். மேலும் இப்போதே நம் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும். நாம் இத்தனை மாதம் தள்ளிப்போட்ட முதல் இரவு இன்று நடந்தே தீரும் என்று கூறினார். அதற்கு சக்தியும் சம்மதித்தார். ஷீலா அவர் சொன்னது போல் கஸ்தூரி இருக்கும் இடத்துக்கு ருக்மணி, கதம்பரி மற்றும் விஸ்வநாதனை அழைத்து சென்றார். அவரை பார்த்து அனைவருமே குழம்பினார்கள். யார் இவர் என்று விசாரித்தார்கள். அப்போது ஷீலா, இவர் தான் தன் அண்ணனின் மனைவி கஸ்தூரி என்று கூறினார். இதை கேட்டதும் அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் இவரை தான் 15 வருடங்களாக இறந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினார். அப்படி என்ன தன நடந்தது என்று கேட்டதற்கு ஷீலா, அதை என்னால் இப்போது சொல்ல முடியாது என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…..