Mouna Ragam 2 Today Episode | 26.01.2022 | Vijaytv
Mouna Ragam 2.26.01.2022
மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதியை திருமணம் செய்து கொண்டால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு என்று ருக்மணி தருணை மிரட்டினார். தருண் தன் அண்ணனுக்கு இட்ப உண்மை தெரிந்தால் அதை தாங்க மாட்டான் என்று யோசித்து பார்த்தார். இதனால் சத்யாவை அவமானப்படுத்தி தனக்கு இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று கூறிவிடுவாரோ என்று நினைத்தார். இதனால் வீட்டில் பெரிய பூகம்பம் வெடிக்கும். தன் குடும்பத்தின் நிம்மதி போய் விடும் என்று பயந்தார். அதனால் தான் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார். பின் ஸ்ருதி மணப்பெண் போல் அலங்காரம் செய்து திருமணத்திற்கு தயார் ஆனார். தருண் நடப்பதை நினைத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார். பின் இருவரும் மணமேடையில் அமர்ந்து சடங்குகளை செய்தார்கள். ஷீலா வீட்டிற்க்கு எதுவம் தெரியாதது போல் வந்து சேர்ந்தார். தருண் எங்கு போனான் என்று தெரியாமல் வீட்டில் அனைவரையும் பதட்டமாக இருந்தார்கள். மனோகர் பையன் திருட்டு கல்யாணம் செய்த விஷயம் இந்த ஊருக்கே தெரிந்து அசிங்க பட வேண்டும் என்று காத்திருந்தார். தருண் தாலி கட்டும் தருணம் வந்தது. அந்த நேரம் சரியாக மனோகர் சத்யா வருண் மூவரும் தருண் திருமணத்தை நிறுத்தினார்கள். அவர்களை பார்த்த ஸ்ருதி, காதம்பரி மற்றும் ருக்மணி அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….