Mouna Ragam 2 Today Episode | 26.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 26.10.2022

Mouna Ragam 2. 26.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தன் வீட்டில் நடந்ததை அவரது அம்மா வீட்டில் சொல்ல வந்தார். அங்கு வந்ததும் சக்தி நம் திட்டத்தை கண்டு பிடித்துவிட்டாள். மேலும் அதை வருண் இடம் சொல்லி அதை வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறி என்னை அசிங்கபடுத்திவிட்டாள் என்று கத்தினார். அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஷீலா ஒன்றுமே புரியாமல் நின்றார். ஸ்ருதி கர்ப்பமாக இருக்கிறார் என்று நினைத்த ஷீலாவுக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நமக்கு மேல், நம்மையும் ஏமாற்றி இவளோ பெரிய நாடகம் நடத்தி இருக்கிறார்கள் என்று யோசித்தார். காதம்பரி ருக்மணியை பயங்கரமாக கத்தி கூப்படு போட்டார். பின் ஸ்ருதி கிளம்பினார். அதே நேரம் கார்த்திக்கின் அம்மா சொர்ணம் மற்றும் மல்லிகாவிடம் ஸ்ருதியை இப்படி கேடு கெட்டவலாக மாற்றிவிட்டாளே காதம்பரி என்று புலம்பினார். கார்த்திக்கு இப்படி ஒரு பொண்ணா என்று கதறினார். அந்த நேரம் சொர்ணம் ஸ்ருதி கார்த்திக்கு பிறக்கவில்லை என்ற உண்மைய போட்டு உடைத்தார். அதை கேட்ட மல்லிகா அதிர்ச்சி அடைந்தார். ஆனால் சொர்ணம் எதேதேதோ சொல்லி அதை சமாளித்தார். கார்த்திக் மனோகர் வீட்டுக்கு கோவங்கா வந்து ஸ்ருதியை ஆவேசமாக கூப்பிட்டார். ஸ்ருதி வந்த உடன் அவரை பளார் என்று அறைந்தார். மேலும் காதம்பரி போல் நீயும் உன் வாழ்க்கையை சீரழிக்காமல் இருக்க வேண்டும் என்று கூறினார். இனியும் இதை போல் எந்த காரியமும் செய்யாதே என்று மிரட்டினார். ஆனால் ஸ்ருதி தான் செய்தது தவறே இல்லை என்பது போல் பேசினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author