Mouna Ragam 2 Today Episode | 26.12.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் நிலையை பார்த்து பார்த்து சக்தி நொந்து கொண்டார். அதை கவனித்த மனோகர் இப்படியே இருப்பதில் எந்த பயனும் இல்லை, தூங்கி ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு கூறினார். பின் கஸ்தூரி தன் மகன்கள் என்ன விரும்பி சாப்பிடுவார்கள் என்று நினைவு படுத்தி கூறினார். தருண் இதை தான் விரும்பி சாப்பிடுவான். வருணுக்கு இது தான் பிடிக்கும் என்று கூறினார். இதை கேட்டு தருண் சந்தோசத்தில் இருந்தார். தன் அம்மா கூடிய விரைவில் சரி ஆகி விடுவார் என்று நினைத்தார். மேலும் வருண் உடல் நிலை பற்றியும் விசாரித்தார். நான் தன் அந்த விபத்தில் தப்பித்துவிட்டேன் பின் எதற்கு வருண் இன்னும் சரி ஆகவில்லை என்று கேட்டார். அதை தான் புரியாமல் நாங்களும் இருக்கிறோம் என்று கூறினார். பின் கஸ்தூரி சக்தியை பார்த்து இனி வருண் அருகில் நீ வராதே. அவன் சரியாக வேண்டும் என்றால் ஒதுங்கியே இரு என்று கூறினார். இதை கேட்ட சக்தி அதிர்ச்சி அடைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…