Mouna Ragam 2 Today Episode | 28.01.2022 | Vijaytv
மௌன ராகம் தொடரில் இன்று, நடந்ததை நினைத்து வீட்டில் அனைவரும் குழப்பத்தில் இருந்தார்கள். மனோகர் அப்போது தான் சத்யா தான் சரியான நேரத்தில் இந்த விஷயத்தை கூறி என் மானம் மரியாதையே காப்பாத்தினாள் என்று கூறினார். உடனே சத்யாவுக்கு எப்படி இந்த விஷயம் தெரியும் என கேட்டார்கள். அதற்கு ஸ்ருதி தான் தனக்கும் தருணுக்கும் இன்னும் 1 mni நேரத்தில் கல்யாணம் என்று கூறினார். அதனால் தான் நான் பதறிப்போய் கிளம்ப சொன்னேன் என்றார். ஷீலாவுக்கு அப்போது தான் தெரிந்தது ஸ்ருதி தான் இந்த வேலையை ஆர்வ கோளாறினால் செய்து உள்ளார் என்று. உடனே ருக்மணிக்கி அழைத்து விஷயத்தை கூறினார். ருக்மணி இதை கேட்டதும் ஸ்ருதி மீது கோபம் கொண்டார். இந்நேரம் நடந்தது முடிந்து இருக்க வேண்டிய கல்யாணத்தை உன் வாயாலே கெடுத்து விட்டாயே என்று புலம்பினார். பின் ஷீலா மீண்டும் வேறு வாய்ப்பு கிடைக்கும் பயப்பட வேண்டியதில்லை என்று ஆறுதல் கூறினார். வருண் தன் தம்பி எதிலுமே 100 முறை யோசித்து தான் செய்வான் ஆனால் இந்த விஷயத்தில் எப்படி இவளோ பெரிய முட்டாள் தனம் செய்துள்ளான் என்று புலம்பினார். பின் மனோகர் இடம் சுருதியையே தருணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஷீலா, வருண் சத்யா மூவரும் கூறினார்கள். மனோகர் என்ன முடிவு செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…