Mouna Ragam 2 Today Episode | 28.12.2022 | Vijaytv
Mouna Ragam 2. 28.12.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி அவரது குடும்பத்தில் அனைவரையும் மீண்டும் அழைத்து பேசினார். இந்த திட்டம் கண்டிப்பாக சரி வரும் என்று கூறினார். ஆனல் இதில் கஸ்தூரி அத்தைக்கு எந்த வித ஆபத்தும் வராது என்று கூறினார். ஆனால் மனோகர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பின் கஸ்தூரி இடத்தில் தன்னை வைத்துதான் இந்த திட்டத்தை நிறைவேற்ற போவதாக கூறினார். அதற்கும் குடும்பத்ததில் ஒத்துக்கொள்ளவில்லை. உனக்கு எதாவது ஆபத்து வந்தாலும் அதை தாங்கிக்கொள்ள முடியாது என்று கூறினார் மனோகர். ஆனாலும் சக்தி பிடிவாதமாக இந்த திட்டத்தை வைத்து தான் வருண் குணமடைவார் என்று உறுதியாக நம்பினார். பின் தருண் இடம் விபத்து நடந்த நாளில் என்ன என்ன நடந்தது என்று விசாரித்தார். முடிந்த வரை விவரங்களை சேகரித்தார் சக்தி. கஸ்தூரி கூட சக்தி எதோ தேவை இல்லாத வேலையை தான் பார்க்கிறார் என்பது போல் பேசினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…