Mouna Ragam 2 Today Episode | 29.07.2022 | Vijaytv
Mouna Ragam 2. 29.07.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சக்தி இருவரும் ஊரை சுற்றி நடந்தார்கள். ஒவ்வொரு இடமாக சென்று அவர்களின் நினைவுகளை பகிர்ந்தார்கள். இருவரும் சேர்ந்து கை கோர்த்து நடந்தார்கள். மேலும் அவர்கள் வேலை பார்த்த இடத்துக்கும் சென்றார்கள். அங்கு சென்று வேலை பார்ப்பவர்களுக்கு டீ வாங்கி கொடுத்தார் வருண். மேலும் அவர்களுடன் பேசி சிரித்து நேரத்தை செலவிட்டார்கள். கார்த்திக் தனக்கு மாத்திரை கொடுக்க மல்லிகா வருவதற்காக காத்திருந்தார். மல்லிகா வந்ததும் அவர் மருந்து கொடுத்த நேரத்தில் பேச முயற்சித்தார். தான் இங்கு இருப்பதில் உனக்கு சந்தோசம் இல்லையா என கேட்டார். ஆனால் மல்லிகா அதற்கு பதில் சொல்லவே இல்லை. அதற்குள் பழனி மட்டன் வாங்கி வந்து விட்டார். மால்லிகா சமைக்க கிளம்பினார். ஆனால் பழனி தானே சமைப்பேன் என்று கூறினார். அதன்படி சமைத்து அனைவருக்கும் பரிமாறினார். அதே நேரம் காதம்பரி அவரது வீட்டில் பித்து பிடித்தது போல் நடந்து கொண்டார். ருக்மணி மற்றும் ஸ்ருதி இருவரும் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் முடியவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…