Mouna Ragam 2 Today Episode | 30.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 30.08.2022

Mouna Ragam 2. 30.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சக்தி இருவரும் வண்டி ஓட்ட சென்ற இடத்தில் கார்த்திக் கிருஷ்ணா பாட்டு பாடுவதை ரசித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார்கள். இவர்கள் சந்தோசமாக இருப்பதை பார்த்து ஸ்ருதிக்கு எரிச்சலாக இருந்தது. ஷீலா எப்போதும் போல வருணுக்கு மாத்திரை எடுத்து கொடுத்தார். மீண்டும் சக்தி அந்த மாத்திரையை தன்னிடம் தருமாறு கூறினார். ஆனால் ஷீலா கோவப்பட்டார். அதனால் சக்திக்கு ஸ்னதேகம் வர ஆரம்பித்தது. எதற்காக மாத்திரையை மறைத்து மறைத்து கொடுக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தார். வருண் தாண்டிக்குடியில் இருந்த வரை எந்த மாத்திரையும் சாப்பிடாமல் தூங்கினார் என்று தெரிந்ததும் மேலும் சந்தேகம் வந்தது. இந்த நிலையில் சக்தி சந்தோசமாக இருக்க கூடாது என்று நினைக்கும் ஸ்ருதி வருண் நிலை இன்னும் மோசம் ஆவதற்கு வேறு மாத்திரை தர போவதாக திட்டம் போட்டார். காலையில் எழுந்ததும் காதம்பரு மற்றும் ருக்மணி இருவரும் ஜெயிலில் இருந்து வெளியே வர போவதாக நியூஸ் வந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author