Mouna Ragam 2 Today Episode | 31.01.2022 | Vijaytv
Mouna Ragam 2.31.01.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, தருண் மற்றும் ஸ்ருதி திருமணத்தை பற்றி மீண்டும் குடும்பத்தில் அனைவரும் பேசினார்கள். மனோகரிடம் ஷீலா ஸ்ருதி மற்றும் வருண் மூவரும் பேசி மனதை மாற்றினார்கள். மனோகர் கடைசியில் தருண் ஸ்ருதி திருமணத்திற்கு சம்மதித்தார். உடனே சத்யா ஷீலா வருண் மூவருமே மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் மனோகர் இதில் தனக்கு ஒரு நிபந்தனை இருப்பதாக கூறினார். இந்த திருமணம் நடக்க வேண்டும் என்றால், கார்த்திக் இந்த திருமணத்தில் கலந்துகொள்ள கூடாது என்று கூறினார். இதை கேட்டதும் சத்யா அதிர்ச்சி அடைந்தார். ஷீலாவும் அதெப்படி தான் பெத்த மகள் திருமணத்தில் அவர் இல்லாமல் எப்படி என்று கேட்டார். ஆனால் மனோகர் அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார். தான் ஒரு அப்பாவாக எப்படி கஷ்டப்பட்டேன் அதே வலியை அவனும் உணரவேண்டும் என்று கூறினார். இந்த திருமணம் நடக்க இது ஒன்று தான் வழி என்றும் கூறினார். பின் இதை இந்த வீட்டு மருமகளாக சத்யாவை இந்த விஷயத்தை கார்த்திக் வீட்டில் பேசி முடிவு எடுக்கும்படி சொன்னார். இதனால் சத்யா மிகுந்த வருத்தத்தில் இருந்தார். ஆனால் வருண் நானும் அத்தையும் உன் கூடவே வருகிறோம் பேசி பார்க்கலாம் என்று கூறினார்.உடனே ஷீலா வருண் மற்றும் சத்யா மூவரும் கார்த்திக் வீட்டிற்கும் வந்துசேர்ந்தார்கள். கார்த்திக் வீட்டில் அனைவரும் குழப்பத்தில் நின்றார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…