Mouna Ragam 2 Today Episode | 31.01.2023 | Vijaytv
Mouna Ragam 2. 31.01.2023
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி, சொர்ணம் மற்றும் ஷாலினியை இனி இப்படி பேச வேண்டாம் என்று கண்டித்தார். இனி ஸ்ருதி பற்றியோ அவரது அம்மா காதம்பரி பற்றியோ எதுவும் பேச வேண்டாம். இதனால் அவருக்கு மன வேதனை என்று கூறினார். பின் சக்தி இல்லாத நேரம் ஷாலினி சொர்ணத்திடம் தருண் ஸ்ருதி பற்றி விசாரித்தார். அப்போது, தருணுக்கு ஸ்ருதியை பிடிக்கவே பிடிக்காது, அவனை இவள் மிரட்டி தான் திருமணம் செய்தாள். அப்படி செய்ததும் இருவரும் சந்தோசமாக வாழவில்லை என்று கூறினார். இதனால் ஷாலினி மேலும் தருண் மேல் பாவம் பார்த்தார். பின் சற்று நேரத்தில் ஸ்ருதி தருண் இடம் தன்னை எதற்காக அனைவர் மத்தியிலும் அவமானப்படுத்தினீர்கள் என்று கத்தினார். மேலும் தருண் அவர் பங்குக்கு பேச இருவருக்கும் இடையில் சண்டை வளர்ந்தது. இதை பார்த்த ஷாலினி தன் அத்தை சொன்னது சரி தான் என்று நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…