Mouna Ragam 2 Today Episode | 31.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 31.10.2022

Mouna Ragam 2. 31.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி தன் அம்மா அப்பா இருவரும் சேர்ந்து முதல் முறையாக கச்சேரி செய்ய போவதால் சந்தோசத்தை பகிர இனிப்பு செய்தார். அதை வீட்டில் அனைவருக்கும் கொடுத்து சந்தோசத்தை வெளிப்படுத்தினார். வருண் கூடிய விரைவில் தானும் கார்த்திக் மாமாவும் சேர்ந்து கச்சேரி செய்வோம் என்று கூறினார். அதே நேரம் சக்தி தானும் ஸ்ருதியும் சேர்ந்து அப்பா பிறந்தநாளுக்கு பாடினால் அப்பா சந்தோஷப்படுவார் என்று கூறினார். அதை கேட்டு ஸ்ருதி கோவத்தில் கொந்தளித்தார். தனக்கு வரும் பிரச்சனை அனைத்துமே சக்தியால் தான் என்று கத்தினார். மல்லிகாவின் அப்பாவும் பாடுவதே என்னால் ஜீரணிக்க முடியவில்லை இதில் நீயும் நானும் பாட வேண்டுமா என்று கத்தினார். பின் ஸ்ருதி தருண் இடம் எப்படியாவது பேசி அவரை சமாதானம் செய்து பேச வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். தன் பக்க நியாயத்தை எடுத்து கூற நினைத்தார். ஆனால் தருண் அதை கேட்க விரும்பாமல் கிளம்பினார். சக்தி மற்றும் வருண் இருவரும் கார்த்திக் வீட்டுக்கு வந்து பிறந்த நாளன்று என்ன செய்வது என்று திட்டம் போட்டார்கள். அப்போது மல்லிகா பாட்டை கேட்க வேண்டும் என்று வருண் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author