நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று, மாசாணி மற்றும் வடிவுக்கு அதிர்ச்சி தரும் விதமாக கமிஷனர் ஐஸ்வர்யா யாருக்கும் சொந்தமில்லை எனவும், அவருக்கு அவர் துணையை தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை இருக்கிறது எனவும் கூறுகிறார். அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய பின்னர் மாயன் ரத்னவேல் தட்டு மாற்ற நிச்சயதார்த்தம் நடந்து முடிகிறது.
சாரதா நாச்சியார் வாழ்க்கையில் அனைத்தும் சந்தோஷமாக நடப்பதாக வருத்தப்பட மாறனோ, இந்த கல்யாணத்தை நடத்த விடாமல் தான் சாதிப்பதாக கூறுகிறார். அவர் மாடர்னாக உடை அணிந்து வந்த தாமரையை திட்டவும் செய்கிறார்.
நாச்சியார் வீட்டில் அனைவரும் கார்த்திக்கின் பெற்றோரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அவர்கள் அங்கு வருகிறார்கள். ஐஸ்வர்யா மற்றும் கார்த்திக்கின் திருமணத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறிவிட்டு, நாச்சியாரை தனியாக அழைத்து, 10 லட்சம் ரூபாய் பணமும் 100 பவுன் நகையும் வரதட்சணையாக வேண்டும் எனக்கூறி அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.