மாயனை பிரியும் மஹா? Naam Iruvar Namakku Iruvar 14.10.2021 update
Naam Iruvar Namakku Iruvar Maaran Plan
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று கோவிலில் வைத்து சாரதாவும் நாச்சியாரும் மாற்றி மாற்றி வாக்குவாதம் செய்து கொள்கிறார்கள். மகாவின் தீர்த்தம் நிகழ்ச்சியை தான் நடத்துவேன் என சாரதா கூற, மாயன் எனது மகன், மகா எனது மருமகள் நானே நடத்துவேன் என நாச்சியாரும் கூறுகிறார். அவர்களது வாக்குவாதம் ஒரு போட்டியாக மாறுகிறது.
மாறனோ, நாச்சியார் குடும்பத்திடமிருந்து மாயனை எப்படி பிரித்து தன் தாயுடன் சேர்ப்பது என யோசிக்கிறார். புதிதாக வந்திருக்கும் டிடி அவருக்கு ஒரு புது யோசனையை வழங்குகிறார். அதன்படி மாயனை மகாவிடம் இருந்து பிரித்து, மகாவையும் சாரதவையும் ஒன்று சேர்த்தால், மாயனுக்கு வேறு வழி இல்லாமல் இவர்களோடு சேர்ந்து விடுவார் என கூறுகிறார்.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக மாறன் அழுவது போல் நடித்துக்கொண்டு மஹாவிடம், மாயன் தங்களை உதாசீனப்படுத்தும் மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்வதாகவும் மகாவின் மனசை சஞ்சலபடுத்துகிறார். இவர்களது திட்டம் பலிக்குமா பலிக்காதா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.