நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று சாரதா நாச்சியாரை பணம்தான் வேண்டுமா என்று அசிங்கப்படுத்த, நாச்சியாரம்மா மாயனுக்கு நீ என்ன செய்தாய் என சாரதாவை மீண்டும் கேள்வி கேட்டு கிடுக்கிப் பிடி பிடித்தார்.
பின்னர், நாச்சியார் எப்படியாவது மாயனை தன் தாய் சாரதாவுடன் போய் சேர்ந்து விடுமாறு கூற, மாயன் மறுத்து விட்டு கண்டிப்பாக எனக்கு அனைவரும் முக்கியம் எனக் கூறுகிறார்.
இதற்குப்பின் ரத்னவேல் சாரதா மூவரும் மாயனை இருக்க வைப்பதைப் பற்றி பேசிக்கொண்டிருக்க, மாறன் ஒரு மணி நேரம் மாயனுக்கு கெடு விதிக்கிறார். ஒன்று அவர்கள் அனைவரையும் விட்டுவிட்டு எங்களோடு வந்து விட வேண்டும் இல்லையென்றால் அவர்களோடு சென்றுவிடவேண்டும் எனக் கூறுகிறார். இதே விஷயத்தை பின்னர் மாயனிடமும் நேரடியாக மாறன் கூற, ஐஸ்வர்யா காயத்ரி மற்றும் கத்தி இவர்களும் மாயனிடம் மாறனிடம் விட்டுக்கொடுத்து போகுமாறு கூறுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்