நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று, மாறன்தான் இந்த வீட்டு பிரச்சினைக்கு காரணம் என்பதை மாயன் தெரிந்து கொள்கிறார். மாசாணி மாறனிடம் புதிதாக உடன்படிக்கை போட்டு சமாதானமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் மாயன் அங்கு வர, மாறனுக்கும் மாயனுக்கும் இடையில் வாக்குவாதம் வருகிறது. இருக்கும் வீட்டை விட்டு மாயனையும் நாச்சியாரையும் 10 நாட்களில் துரத்துவதாக மாறன் கூறுகிறார். மாறன் இருக்கும் வீட்டை விட்டு அவரை பத்து நாட்களில் துரத்துவோம் என மாயன் கூறுகிறார்.
இதையெல்லாம் பார்த்து சாரதா மிகவும் வருத்தம் அடைகிறார். மாறன் அவருக்கு ஆறுதல் கூறுகிறார். பின்னர் மாயனைப் பற்றி மாசாணி மாறனிடம் எச்சரிக்கை விடுக்கிறார்.
கடைசியாக, ராஜரத்தினத்தின் நண்பரும் குடும்ப வழக்கறிஞருமான நபரிடம் மாயன் பேசி நடந்தவை அனைத்தையும் கூறுகிறார். அவர் புதிதாக உயிரில் இருக்கும் ஒரு பத்தியை பற்றி கூறி, பூர்வீக வீட்டை விற்கும் உரிமை யாருக்கும் இல்லை எனக் கூறுகிறார்.