Naam Iruvar Namakku Iruvar today episode 09.09.2021 update
Naam Iruvar Namakku Iruvar 9 September 2021
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று, கத்தி மாசாணியை போனில் அழைத்து உயிலின் புது திருப்பத்தைப் பற்றிக் கூறுகிறார். மாசாணி அதை மாறனிடம் கூற அவரோ அதிர்ச்சியாகிறார். பின்னர், மாறனும் சாரதாவும் சேர்ந்து புதிதாக ஒரு திட்டத்தை முடிவு செய்கிறார்கள்.
மாயன் இந்த சந்தோசமான விஷயத்தை வீட்டில் சொல்ல, வீட்டில் யாரும் இதை நம்ப மறுக்கிறார்கள். உயிலின் அந்தப் பத்தியை பிரதி எடுத்து சரண்யாவிடம் காட்டுகிறார். மாசாணி சாரதாவை நோகடிப்பது போல் பேசுகிறார். சாரதா சற்றும் சளைக்காமல் தான்தான் வெல்லப் போவதாக கூறுகிறார்.
அதேசமயத்தில் மாயனிடம் அனைவரும் தாங்கள் அந்த வீட்டிற்கு வரவில்லை எனவும், நீயே போய் பேசிக்கொள் எனவும் கூறுகிறார்கள். அதற்குள் மாறன் அந்த வீட்டை இடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதைக் கேட்ட நாச்சியார் மற்றும் மாயன் அதிர்ச்சி ஆகிறார்கள். அதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.
மேலும் விவரங்களுக்கு வீடியோவை பார்க்கவும்.