நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று மகாவும் சாரதாவும் கோவிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு வந்த காயத்ரி மற்றும் சரண்யா வேறு ஒருவரை பார்த்து சிரிக்கும் பொழுது சாரதா அவர்கள் தன்னை பார்த்து தான் சிரிக்கிறார்கள் என தவறாக நினைத்துக் கொள்கிறார்.
பின்னர், அவருடன் வாக்குவாதம் செய்யும் சரண்யா சாரதாவின் நடத்தையைப் பற்றி தவறாக பேசியதுடன் கடைசிவரை தனது தாயிடம் சாரதா தோற்றுக்கொண்டே தான் இருப்பார் எனக் கூறி விடுகிறார்.
இந்த அவமானம் தாங்க முடியாமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார். கடைசி நேரத்தில் மாறன் சாரதாவை காப்பாற்றி விடுகிறார். மகா கோவிலில் நடந்ததை மாறனிடம் கூறிவிடுகிறார் மாறன் கோபத்தோடு நாச்சியார் வீட்டிற்கு சென்று சரண்யாவுக்கு முன் துப்பாக்கியை நீட்டுகிறார்.