மாறனின் கோபம் – Naam Iruvar Namakku Iruvar Today episode 15.11.2021 review
Naam Iruvar Mayan stops Maran
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று ஆத்திரத்தோடு சரண்யாவை துப்பாக்கி முனையில் நிறுத்திய மாறனை தடுக்கிறார் மாயன். பின்னர், மாறனை குழப்பி சாரதா சரண்யாவை பெரிய ஆளாக கருதாமல் அப்படி தவறுகளை செய்திருக்க வேண்டாம் எனக் கூறுகிறார். இந்த குடும்பத்தையே பழி வாங்குவேன் என சூளுரைத்து விட்டு கோபமாக கிளம்புகிறார் மாறன்.
ஆத்திரத்தில், நாச்சியார் சரண்யாவை அறைகிறார். சரண்யாவோ தான் செய்தது தவறு இல்லை என வாதாடுகிறார். வேதனையோடு வீட்டில் அமர்ந்திருக்கும் போது மகாவும் தூபம் போட்டு அவரது கோபத்தை அதிகரிக்கிறார். பின்னர், மாயனை தொலைபேசியில் அழைத்து மகா சரண்யா சாரதாவிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறுகிறார்.
இந்த விஷயத்தை நாச்சியாரிடம் கூற, அதை மறுத்து பேசிவிட்டு வீட்டை விட்டு வெளியேற துணிகிறார் சரண்யா. மாயன் அவர்களை தடுத்து தானே தன் தாயிடம் மன்னிப்பு கேட்கப் போவதாக கூறுகிறார்.