மீண்டும் ஜெயிக்கும் மாறன்? Naam Iruvar Namakku Iruvar Today episode 23.09.2021
Naam Iruvar Maran Nachiyar
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று தெய்வம் கூட நாச்சியாரை கைவிட்டு விட்டது என மாயன் அச்சப் படுகிறார். மகா அவருக்கு ஆறுதல் கூறுகிறார். பின்னர், படையலுக்கு பொங்கல் வைக்க நாச்சியார் ஆரம்பிக்கிறார். போட்டிக்கு சாரதாவும் பொங்கல் பானையை வைத்து அவரும் சமைக்க தொடங்குகிறார்.
பூசாரி பேசி சமாளிக்க முடியாமல் யாருடைய பானை முதலில் பொங்குகிறதோ அவரது உணவை படையலுக்கு வைத்து விடலாம் என மாறன் கூறுகிறார். இரண்டு பக்கமும் போட்டி தொடங்கியது. அதிக விறகு கட்டைகள் கொண்டும், சிறிதளவு பெட்ரோலை ஊற்றியும் போட்டியில் மாறனும் சாரதாவும் ஜெயிக்கிறார்கள். இதைப்பார்த்து நாச்சியார் உடைந்து போகிறார்.