மஹாவின் அத்தை பாசம் – Naam Iruvar Namakku Iruvar Today episode 24.09.2021
Naam Iruvar Namakku Iruvar Mayan
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று, நாச்சியார் கடவுள் கூட தன்னை கைவிடுவதாக கருதுகிறார். தனது மகள்களிடம் மனம் விட்டுப் பேசி அழுகிறார். சுவாமி அருள் வந்து சாரதா விடம் சேலையை கொடுத்துவிட்டால் அப்போதே உயிரை விட்டுவிடுவேன் எனவும் கூறுகிறார்.
சாரதா மகாவை அழைத்து அவரை தன் பக்கம் வருமாறு கூப்பிடுகிறார். மகா அழகாக பேசி அதை மறுத்து விடுகிறார். பின்னர் தான் சமைத்த பொங்கலைப் மாயனை எப்படியாவது சாப்பிட வைக்க வேண்டும் என மகா விடம் கேட்டுக் கொள்கிறார். மஹா மாயனிடம் நைசாக பேசி அவரின் மனம் மாற்றி அவருக்கு பொங்கலை ஊட்டியும் விடுகிறார். இதைப்பார்த்து சாரதா மகிழ்ச்சி அடைகிறார்.