மாயனின் காதல் தருணங்கள் – Naam Iruvar Namakku Iruvar today episode 25.10.2021 review
Naam Iruvar Namakku Iruvar Mayan love on Maha
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று மகா மாறனிடம் கார்த்தியை பற்றி விசாரிக்கிறார் மாறும் நம்பும்படி காரணங்களை கூறி மகாவை மடக்கி விடுகிறார். ஆனால் மாயன் வரும்பொழுது மாறன் வேண்டுமென்றே வம்பிழுத்து மாயனை கோபம் கொள்ள வைக்கிறார். மாயனும் கத்தியை விரைவில் திரும்ப அழைத்து வருவதாக கூறுகிறார்.
கார்த்தி ஐஸ்வர்யா விடம் மீண்டும் முத்துராசு கொலை வழக்கைப் பற்றி பேச, ஐஸ்வர்யா சந்தேகப்பட்டு கோபமடைகிறார். இன்னொரு பக்கம், மகாவிற்கு தீர்த்த நிகழ்ச்சிக்கு தான் செய்யவிருக்கும் விஷயங்களை மாயன் தன் கனவுகளாக விவரிக்கிறார். ஆனால், நிலைமை சரியில்லாதது பற்றி மகா கூறி தனக்கு ஆடம்பரம் தேவையில்லை எனவும் கூறுகிறார்.