Naam Iruvar Namakku Iruvar today episode 29.11.2021 review
Naam Iruvar Namakku Iruvar Mayan tied
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று மாயனை மஹாவுடன் மகிழ்ச்சியாக கொடைக்கானல் சென்று வருமாறு நாச்சியார் குடும்பத்தினர் அனுப்புகிறார்கள்.
மகாவுக்கும் மாயனுக்கும் மாறன் கொடைக்கானலில் நட்சத்திர விடுதியில் அறை ஒன்று பதிவு செய்கிறார். அதை பரிசாக கொடுக்கிறார். அதை மாயன் ஏற்றுக்கொள்ள மாட்டார் எனக் கூறியதும் அதை ரத்னவேல் மாமா கொடுத்ததாக பொய் சொல்லச் சொல்கிறார்.
இந்த சமயத்தில் மாயனுக்கு ஒரு கூரியர் வருகிறது. அதில் கத்தி கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகிறார். அந்த கடிதத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு செல்கிறார். அங்கே ஐந்து அடியாட்கள் சேர்ந்து மாயன் முகத்தில் போதை மருந்து அடித்து அவரை மயக்கமடைய செய்கிறார்கள். பின்னர், இது மாறனுடைய திட்டம் என தெரிகிறது. மாறன் மாயன் போல வேடம் போட்டு அனைவரையும் ஏமாற்ற கிளம்புகிறார்.