பாண்டியனுக்கு ஷாக்? Pandian Stores 2 today episode 13th June 2024 Review
Pandian Stores 2 Meena surprised PC Hotstar.jpg
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்று சென்னைக்கு செல்லும் செந்திலுக்கு அடுக்கடுக்காக வேலைகள் கொடுக்கிறார் பாண்டியன். செந்திலும் வேறு வழியில்லாமல் தலையாட்டி பரிதாபமாக நிற்கிறார். மீண்டும் வீட்டிற்கு வரும் பொழுது அங்கு பாக்கியம் இருப்பதை பாண்டியன் பார்க்கிறார். பாக்கியத்திடம் நகைகளை லாக்கரில் வைத்ததைப் பற்றி கூறுகிறார். பின்னர் பாக்கியம் செந்திலையும் மீனாவையும் சென்னைக்கு அனுப்புவதை போல சரவணன் மற்றும் தங்க மயிலை எங்காவது அனுப்பலாமே என கேட்கிறார். முதலில் கோயிலுக்கு அனுப்பலாம் என யோசித்த பாண்டியன் கோமதி கூறிய பிறகு அவர்களை சினிமாவிற்கு அனுப்ப முடிவு செய்கிறார். தானே சென்று டிக்கெட் வாங்கி வருவதாக அவர் சொன்னாலும் குடும்பத்தில் அனைவரும் அவரை மனமாற்றி ஆன்லைனில் டிக்கெட் வாங்கி கொள்ளலாம் எனக் கூறுகிறார்கள்.
தங்கமயில் பாண்டியனின் ஃபோனிலிருந்து டிக்கெட் வாங்குகிறார். அதற்கு 1200 ரூபாய் ஆனதை கண்டு அதிர்ச்சி அடைகிறார் பாண்டியன். சினிமா டிக்கெட் சேர்த்து நொறுக்குத் தீனிகளும் குளிர்பானங்களும் வாங்கிய செலவு என தங்கமயில் கூற சரவணன் அதிர்ச்சி அடைகிறார். வேறு வழியில்லாமல் பாண்டியன் அவர்களை சினிமாவிற்கு அனுப்ப ஒத்துக் கொண்டாலும் அவரது மனம் குமுறிக் கொண்டிருக்கிறது. கோமதியும் தனது புலம்பலை ராஜி மற்றும் மீனாவிடம் கூறுகிறார். சரவணன் தங்க மகிழிடம் இனி இப்படி செல்ல வேண்டாம் எனவும் கூறுகிறார். ஒரு வழியாக தம்பதியினர் சினிமாவிற்கு செல்ல புலம்பிக் கொண்டிருக்கும் கோமதியை சமாதானப்படுத்துகிறார்கள் மற்ற இரு மருமகள்கள்.