கடுப்பேத்தும் தங்கமயில்! Pandian Stores 2 today episode 17th June 2024 Review
pandian stores 2 raji surprised pc hotstar7491522706812802714.jpg
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று ராஜி டியூஷன் ஆரம்பிப்பதால் தாம் மாட்டிக் கொள்வோமா என்ற பயம் தங்கமயில் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. அவர் பாண்டியனின் அனுமதியை பெறலாமே என கேட்க ராஜி அதை தான் பார்த்துக் கொள்வதாக கூறிவிடுகிறார். சென்னையில் ரொமான்ஸில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மீனா மற்றும் செந்தில் இடையே சிவ பூஜை இடையே புகுந்த கரடி போல பாண்டியன் தொலைபேசி வழியாக நுழைகிறார். செந்திலுக்கு வேலை கொடுத்து அனுப்புகிறார்.
கோமதி ராஜி மற்றும் அரசி பேசிக் கொண்டிருக்கும் பொழுது இரண்டு அடுக்கு சாப்பாடு கேரியர்களை எடுத்துக்கொண்டு தங்கமயில் வெளியே கிளம்புகிறார். சரவணனுக்கு இவ்வளவு சாப்பாடு என கோமதி கேட்கும்பொழுது இன்னொரு கேரியர் பாண்டியன் ஸ்டோர்சிர்க்கு என கூறுகிறார். அதிர்ச்சி அடையும் கோமதி அதை வேண்டாம் எனக் கூறினாலும் தங்கமயில் கேட்கவில்லை. ஆட்டோ வரவைத்து கிளம்பி விடுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸில் பாண்டியன் முதலில் மறுத்தாலும் பின்னர் தங்கமயில் பரிமாறிய விதத்தையும் அவர் கடையில் வியாபாரம் செய்யும் விதத்தையும் பார்த்து பெருமிதம் கொள்கிறார்.