Pandian Stores 2 today episode 27th May 2024 Review| Vijay Television
IMG 20240527 184900.jpg
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்று தங்கமயில் மற்றும் சரவணன் திருமணம் இனிதே நிறைவேறுகிறது பின்னர் குடத்திற்குள் மோதிரம் போடும் விளையாட்டு முடிகிறது. அதில் மணமக்கள் யார் ஜெயிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பது தான் முக்கியம். இருவரும் ஜெயிக்க வேண்டும் என பாண்டியன் கூறுகிறார். பின்னர் அனைவரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள் ஜோடியாக புகைப்படங்கள் எடுத்ததற்கு பிறகு மண்டபத்தில் அனைவரும் கிளம்பி விட இரு வீட்டார் மட்டும் உட்கார்ந்து பேசுகிறார்கள். அப்பொழுது தங்கமயிலின் தாய் பாக்கியம் குதர்க்கமாகவே பேசுகிறார். ராஜி மற்றும் மீனாவிடம் திருமணம் ஆகி நான்கு மாதங்கள் ஆகிறது எதுவும் விசேஷம் இல்லையா என கேட்கிறார். அதற்கு மீனா எனது கல்யாணம் முடிந்ததற்கு பிறகு ராஜியின் திருமணம் முடிந்தது இப்பொழுது தங்க மயிலின் திருமணம் முடிந்திருக்கிறது வேறு என்ன விசேஷம் வேண்டுமே என நக்கலாக கேட்கிறார். அவர் உடனே தங்கமயிலிடம் கூறிவிட்டேன் போனவுடன் எனக்கு ஒரு பேரன் இல்லை பேத்தி வேண்டும் என என சொல்கிறார். அதற்கு ராஜி போனவுடன் எப்படி வரும் பத்து மாதங்கள் ஆகுமே என கிண்டல் செய்கிறார்.
பின்னர் பாண்டியனுடைய சபதத்தை முடிக்க பழனிவேல் செருப்பு வாங்கி கொடுக்கிறார். செருப்பு போடாமல் சபதம் எடுத்திருந்ததை பற்றி அறிந்து கொண்டு பாக்கியம் மாப்பிள்ளைக்கு எதுவும் குறையா என கேட்க ராஜி கடுப்பாகி விடுகிறார். எந்த குறையும் இல்லை ஓடிவந்து திருமணம் செய்ததால் எனது வீட்டார் கோபமாகி கல்யாணத்தை நிறுத்த நிறைய முயற்சிகள் செய்தார்கள் அதனாலேயே மாமா சபதம் எடுத்தார் என கூறுகிறார். இப்படி குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் இருப்பதே சிறந்த பண்பு என பாண்டியனும் கூறி தங்கமயிலிடம் தன்னுடைய மற்ற மருமகளிடம் இருந்து பண்புகளை கற்றுக் கொள்ள சொல்கிறார். கடைசியாக தங்கமயிலிடம் பாக்கியம் நிறைய விஷங்களை காதில் ஓதுகிறார். முக்கியமாக இரு மருமகள்களையும் நம்ப வேண்டாம். குழலியையும் நம்ப வேண்டாம் என கூறுகிறார். தங்க நகைகள் என கூறி ஏமாற்றியதால் அந்த நகைகளை நாளை விருந்திற்கு வரும் பொழுது எடுத்து வா அதை நான் லாக்கரில் வைத்து விடுகிறேன் என கூறுகிறார். கடைசியாக அனைவரும் கிளம்பும் பொழுது தங்கமயில் தேம்பித் தேம்பி அழுகிறார். மணப்பெண் வீட்டிற்கு வரும் பொழுது வீடு காலியாக இருக்கக் கூடாது என ராஜி மீனா மற்றும் கதிர் ஒரு காரில் கிளம்புகிறார்கள். ராஜியும் கதிரும் ஒன்றாக முன்னே அமர இருவரின் பார்வையில் சற்றே காதலும் தெரிகிறது. அதை மீனா பார்த்து சிரிக்கிறார்.